https://www.instagram.com/p/CSa9BCBFXuS/?utm_source=ig_web_copy_link
நடிகர் மாதவன் விமானத்தில் தனியாகப் பறந்த வீடியோ வைரலானது.
மாதவன் மற்றும் மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிய
அமெரிக்கைப் பண்டிட் படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடந்தது.
இதற்காக அங்குசென்ற விமானத்தில் நடிகர் மாதவன் மட்டுமே பயணித்துள்ளார்.
அப்பொழுது கொரோனா தொற்றுக்காலம் என்பதால், டிக்கெட் முன்பதிவு
செய்திருந்த பயணிகள் வரவில்லை போலும். அதனால், மாதவன் மட்டுமே
அவ்வளவு பெரிய விமானத்தில் தனி ஒருவராகப் பயணித்துள்ளார்.
இந்த வீடியோவைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள
மாதவன், ”என் வாழ்க்கையில் இதுவொரு சிறந்த தருணம்.
அதேசமயம் வேடிக்கையான மிகவும் வருந்தக்தக்க, வேடிக்கையான
தருணம் என்று தெரிவித்துள்ளதோடு, நீங்கள் இந்த வீடியோவை நம்புவீர்களா?”
என்றும் கேட்டுள்ளார்.
மேலும், ”வேடிக்கையான மற்றும் வருந்தத்தக்க இந்நிலை
விரைவில் முற்றுப்பெறக் கடுமையாகப் பிரார்த்திக்கிறேன்”
என்றும், ”ஒருவரையொருவர் நேசிப்போம்” என்றும் அக்கறையோடு
கூறியுள்ளார்.