வனப்பகுதிகளில் உள்ள தண்டவாள விபத்துகளில் அதிகம் மாட்டிக்கொள்வது யானைகள் தான்.தன் இடம் என காட்டை சுற்று உலா வரும் யானைகள்.தண்ணீருக்காக சில நேரங்களில் மக்கள் உள்ள பகுதிகளுக்கும் போவது வழக்கம்.
வனப்பகுதியில் அமைக்கப்பட்டுருக்கும் தண்டவாளங்களை கடக்கும் பொது இரயில் மோதி இறக்கும் சம்பவம் தொடர்கதை ஆகிவிட்டது.இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்க சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், வடக்கு வங்காளத்தில் யானை ஒன்று தண்டவாளத்தை கடக்கும் போது ,இரயிலை இயக்கிய ஓட்டுனர்கள் சரியான நேரத்தில் பிரேக் போட்டதால் , யானையின் உயிர் காப்பாற்றப்பட்டது.இந்த வீடியோவை வடக்கு வங்காளத்தின் கோட்ட ரயில்வே மேலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் சரியான நேரத்தில் யானையின் உயிரை காப்பாற்றிய இரயில் ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.