தொழில், வர்த்தகம் மற்றும் கலாச்சார செயல்பாடுகளுக்கு என்று மும்பையில் ரிலையன்ஸ் நிறுவனம் ‘ஜியோ உலக மைய’த்தை நிறுவியுள்ளது.இங்கு நிறுவப்பட்டிருக்கும் லிப்ட் ஒன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த லிப்ட்டில் ஒரே சமயத்தில் 200 பேர் வரையில் செல்லலாம் என்று அதை உருவாக்கியுள்ள கோனே நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மிக விசாலமான அறைபோல் இருக்கும் இந்த லிப்ட்டின் எடை 16 டன் ஆகும்.
ஒரு வினாடிக்கு ஒரு மீட்டர் தூரம் இந்த மின்தூக்கி பயணிக்குமாம்.