சில பள்ளிகள் அதிகப்படியான தேர்வுகளை நடத்தி
மாணவர்களுக்கு கடுமையான மன அழுத்தத்தைக்
கொடுத்துவருகின்றன.
எக்ஸாம் வைப்பதால் குழந்தைகள் மன அழுத்தத்தால்
பாதிக்கப்படுவதாக உளவியல் நிபுணர்களும் பெற்றோர்களும்
கூறிவருகின்றனர். அத்துடன் புத்தகப் பையையும் பொதிமூட்டைபோல
குழந்தைகள் சுமந்துசெல்வதைப் பார்த்து பெற்றோர்கள் மனம் வருந்துகின்றனர்.
இந்த நிலையில் 6 வயதுமுதல் 7 வயதுவரையுள்ள குழந்தைகளுக்குத்
தேர்வு அவசியம் இல்லை என்று சீன அரசு சில மாதங்களுக்குமுன்பு
அதிரடியாக அறிவித்துள்ளது. 6 முதல் 7 வயதுவரையுள்ள குழந்தைகளுக்கு
எக்ஸாம் நடத்துவதையும் தடைசெய்துள்ளது. இந்த அறிவிப்பு அங்குள்ள
பெற்றோர்களையும் குழந்தைகளையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
இதுதொடர்பாகக் கூறியுள்ள அந்நாட்டு அரசாங்கம்,
”கல்வி என்பது வாழ்க்கையின் ஓர் அங்கம் மட்டுமே.
அதேசமயம் உடல் ஆரோக்கியம் வாழ்நாள் முழுவதும்
தொடரவேண்டும். குழந்தைகளுக்கு மன அழுத்தம் தரும்
எந்தவொரு செயலும் இருக்கக்கூடாது என்பதற்காகத்
தேர்வை ரத்துசெய்துள்ளோம்” என்று கூறியுள்ளது.
இன்னும் ஒருபடி மேலேபோய் தொடக்க நிலை வகுப்பு
மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.