Wednesday, January 15, 2025

22 ஏக்கர் அழகான தீவு 51 லட்ச ரூபாய்தான்

22 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு தீவு இரண்டு பெட்ரூம்,
ஹால், கிச்சன் கொண்ட ஒரு வீட்டின் விலையைவிடக்
குறைவான விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

சமூக வலைத்தளத்தில் தற்போது இந்தத் தகவல் வைரலாகி வருகிறது.

GOLDCREST என்னும் இணையதள தகவலை
மேற்கோள் காட்டி THE DAILY RECORD நாளிதழ்
இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஸ்காட்லாந்து நாட்டின் மேற்குக் கடற்கரையில்
உள்ளது ஸ்காட்டிஷ் தீவு. மிக அழகான இந்தத்
தீவு 22 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்திருக்கிறது.
இதன் விலை 70 ஆயிரம் அமெரிக்க டாலர் ஆக
நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில் இதன் மதிப்பு சுமார் 51 லட்ச ரூபாயாகும்.
இந்தத் தீவில் இதுவரை ஒரு சிறிய கட்டடம்கூட கட்டப்படவில்லை.
ஒரு மர வீடுகூட இல்லையென்றால் பாருங்களேன்….

இந்தத் தீவில் மக்கள் யாரும் வசிக்கவில்லை. அதேசமயம்,
வனவிலங்குகளும் நிறைய உள்ளன. இங்கிருந்து ஒன்றரை
மைல் அருகில் உள்ள மற்றொரு தீவில் வெறும் 300பேர்
மட்டுமே வசித்து வருகின்றனர்.

டால்பின், சுறா, திமிங்கலங்கள் போன்ற கடல்வால்
உயிரினங்கள் இந்தத் தீவைச் சுற்றியுள்ள கடலில்
வசித்து வருகின்றன. கோடைக்காலத்தில் மட்டும்
மேய்ச்சலுக்காக அருகிலுள்ள தீவில் வசிப்போர்
ஆடுகளை இந்தத் தீவுக்கு ஓட்டிவருகின்றனர்.

தீவை வாங்கி என்ன செய்வது என்பதுதானே உங்கள் கேள்வி….

படகு விட அனுமதி உண்டு. ஆழ்கடல் நீச்சலுக்கு அனுமதி
உண்டு. டைவ் அடிக்கலாம்.

அப்புறமென்ன…? சட்டுனு முடிவு பண்ணி வாங்கிப் போடுங்க…
சும்மா ரெஸ்ட் எடுத்துட்டு வரலாம்…

Latest news