மதியம் குட்டி தூக்கத்திற்கு நேரம் ஒதுக்கிய நிறுவனம்-மகிழ்ச்சில் ஊழியர்கள்

218
Advertisement

ஊழியர்களுக்கு நிறுவனம் அமைவதெல்லாம்  ஒரு வரும் தாங்க.அதேநேரத்தில் நாள்முழுக்க வேலைசெய்யும் ஊழியர்களுக்கு மதியம் சிறிது தூக்கும் தேவை என சில ஆய்வு தெரிவிக்கிறது.இலையென்றால் பணிச்சுமையுடன் மனஉளைச்சலுக்கு அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது.

வெளிநாடுகளில் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் NAP டைம் கொடுக்கிறது.அதாவது தூங்குவதிற்காக நேரம்  ஒதுக்குகிறது.இந்நிலையில் இந்தியாவில் பெங்களூருவை சேர்ந்த வேக் ஃபிட் (WAKE FIT) என்ற மெத்தை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று தங்களது ஊழியர்களுக்கு தூங்குவதற்கு அனுமதியளித்து மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறது.

இந்த அறிவிப்பு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.மேலும் ஊழியர்களுக்கு அனுப்பட்ட மின்னஞ்சலில் , “இனி அலுவலகத்தில் power nap எடுக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதற்காக பிற்பகல் 2 முதல் 2.30 மணி வரையில் நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதனை குறிப்பிடுவதற்காக nap pods என்ற கருவியும் பொருத்தப்படும்” எனவும் தெரிவித்துள்ளது.

வேக் ஃபிட்  நிறுவனத்தின் இந்த அறிவிப்பு இணையத்தில் பகிரப்பட்டு , இணையவாளிகளின் பாராட்டை பெற்றுஉள்ளது.