Wednesday, January 15, 2025

ஆராரோ ஆரீரோ எங்கண்ணே நீயுறங்கு

பச்சிளங்குழந்தையைப் பூனையை ஒன்று தனது காலால்
பாசமாகத் தட்டிக்கொடுக்கும் வீடியோ வலைத்தளவாசிகளின்
கவனத்தை ஈர்த்துவருகிறது.

செல்லப் பிராணிகளின் செயல்பாடுகள் மனதை வருடும்.
அந்த வகையில் அமைந்துள்ளது இந்தப் பூனையின் செயல்.

தன் குழந்தையை உறங்க வைப்பதற்காகத் தாய்
தனது கரத்தால் தட்டிக்கொடுத்துத் தாலாட்டுவதுபோல,
பூனையும் பச்சிளங்குழந்தையை காலால் வாஞ்சையோடு
தட்டிக்கொடுப்பது நெஞ்சை வருடும்விதமாக அமைந்துள்ளது.

வேறுசில பூனைகளின் பாசத்தைப் பொழியும் செயல்களும்
வாஞ்சையாக அமைந்துள்ளன. குழந்தையின் நெற்றியில்
முத்தமிடுவதும், பூனையைக் குழந்தை பாசமுடன்
கட்டித் தழுவுவதும் அன்புக்கு சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றன.

இந்தக் காட்சிகளை நீங்களும் பார்த்து மகிழுங்களேன்…..

Latest news