செய்ய முடியாது என நினைப்பதை சாதித்துக்காட்டுவது தான் சாதனை.
சாதனை படைக்க வயது ஒரு பொருட்டே இல்லை சிறுவர் முதல் முதியவர் வரை இந்த சாதனை பட்டியலில் உள்ளனர்.
சரி , இங்கு ஒருத்தர் 100 வயதில உலக சாதனை பட்டியல்ல இடம்பெற்றுக்காரு.அப்படி என்ன செஞ்சாருனு பார்ப்போம் வாங்க.
பிரேசிலில் ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராக இருப்பவர் 100 வயதான வால்டர் ஆர்த்மேன். இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு ஒரு வருடம் முன்பு, அவருக்கு 15 வயதாக இருந்தபோது,தற்போது உள்ள இதே நிறுவனத்தில் கப்பல் உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கினார்.
அவரின் கடின உழைப்பு, விரைவாக பணிஉயர்வு பெற உதவியது.இந்நிலையில் , கடந்த 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 100 வயதான வால்டர் ஓர்த்மேன், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதாக அதிகாரப்பூர்வமாக கின்னஸ் உலக சாதனை லிமிடெட் அறிவித்தது.
இது குறித்து வால்டர் ஓர்த்மேன் கூறுகையில்,
“நான் அதிகம் திட்டமிடுவது இல்லை, நாளையைப் பற்றி அதிகம் கவலைப்படுவதும் இல்லை. நாளை மற்றொரு நாளாக இருக்கும், அதில் நான் எழுந்து, உடற்பயிற்சி செய்து, வேலைக்குச் செல்வேன்” என்ற ஒவ்வொரு நாளையும் கடப்பதாக கூறுகிறார்.