இருநாடுகளின் மோதலில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது உக்ரைன் நாடு.உறவு, இடம் என அனைத்தையும் இழந்து நிற்கும் உக்ரைன் மக்களுக்கு இந்தியா உள்பட பல நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
போர் களத்தில் பல உணர்ச்சிப்பூர்வனமான நிகழ்வுகளும் நடந்து வருகிறது.இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகையும் ஐ.நா வின் அகதிகளுக்கான தூதருமான ஏஞ்சலினா ஜோலி திடீரென உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார்.
உக்ரைன் சென்ற ஏஞ்சலினா ஜோலி , உக்ரைனின் கிராமடோர்ஸ்க் ( Kramatorsk ) ரயில் நிலையத்தில் ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் உட்பட லிவிவ் நகரத்தில் தஞ்சம் அடைந்துள்ள இடம்பெயர்ந்த மக்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது ஏஞ்சலினா ஜோலி உடன் பலர் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் அக்குளை குழந்தைகளுடன் ஏஞ்சலினா ஜோலி விளையாடும் வீடியோகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏஞ்சலினா ஜோலின் வருகை தங்களால் நம்பமுடியவில்லை எனவும் , ஆச்சிரியமாக இருப்பதாக அந்த மக்கள் தெரிவித்தனர்.