மனதில் வஞ்சகமற்று, பொறாமை கொள்ளாது, பொய் கூறாமல், வாழ்கின்ற இனிமையோ உள்ளது குழந்தை பருவத்தில்…!
அடைமழையில் நனைந்து, நில மண்ணை சாப்பிட, அன்னை குரல் கேட்டதும் ஓடி ஒளித்தே சிரிக்கும் கனாக்காலம்…!
தோழியின் விளையாட்டு பொருள் தனக்கும் வேண்டுமென நிலத்தில் உருண்டே அழும் சுட்டித்தனம் நிறைந்த பருவம்…!
ஊர்வம்பில்லாது கவலைகளற்று தூக்கத்தில் புரண்டே மகிழ்ச்சி காணும் மென்மைப் பருவம்…!
இதுபோன்றது மகிழ்ந்திருந்த உக்ரைன் நாட்டை சேர்ந்த 3 வயது குழந்தையின் பாடல் லட்சக்கணக்கான இதயங்களை வென்றுள்ளது.
உக்ரைனின் இர்பினைச் சேர்ந்த 3 வயது குழந்தை ,கீவில் நடந்த நிகழ்ச்சியில் ஒரு பிரபலமான பாடலைப் பாடி பார்வையாளர்களைக் கவர்ந்து லட்சக்கணக்கான இதயங்களை வென்றான்.
கீவ் மெட்ரோ நிலையத்தின் உள்ளே பிரபல இசைக்குழு நடத்திய நிகழ்ச்சியில் லியோனார்ட் புஷ் என்ற 3 வயது உக்ரைன் குழந்தை காணொளி வாயிலாக இணைந்து ‘நாட் யுவர் வார்’ என்ற பாடலை பாடினான்.சிறுவனின் ஆத்மார்த்தமான குரலைக் கேட்டு அங்கிருந்த மக்கள் அமைதியாகி, கண்ணீருடன் கேட்டு ரசித்தனர்.
இதற்கு முன் போரின் போது ,இந்த குழந்தை பாடிய கிளர்ச்சிப் பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை குடும்பத்தோடு வசித்துவந்த பகுதி ரஷ்ய படை தாக்கப்பட்ட பின்னர் அவரது குடும்பம் உக்ரைனின் மேற்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது.
லட்சக்கணக்கான இதயங்களை நொறுக்கிய இந்த குழந்தையின் பாடல் உலகமெங்கும் கேட்க தொடங்கியுள்ளது.லியோனார்ட் என்ற இந்த குழந்தை அடுத்த கட்டமாக பலப்பகுதிகளுக்கு சென்று பாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில் இணையத்தின் மூலம் இந்த குழந்தையின் மனதோடு பயணிக்க தொடங்கியுள்ளனர் உலகின் பலப்பகுதியை சேர்ந்த மக்கள்.