சிறுமியின் முதுகுத்தண்டு 80 டிகிரி கோணத்தில் வளைந்திருக்கும் அதிர்ச்சி

608
Advertisement

இவ்வுலகில் பிறகும் மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை.அதிலும் சிலர் வித்யாசமான உடலமைப்புடன் இருப்பார்கள்.இந்நிலையில் 12 வயது சிறுமி ஒருவருக்கு முதுகுத்தண்டு 80 டிகிரி கோணத்தில் வளைந்திருப்பது ஸ்கேன் செய்ததில் தெரியவந்துள்ளது

சோஃபி பர்கெஸ் என்ற 13 வயது சிறுமிக்கு முதுகு மற்றும் தோள்பட்டையில் சில நாட்களாகவே வலி ஏற்பட்டுள்ளது.ஒரு கட்டத்தில் மருத்துவரை நாடினர் சிறுமியின் குடும்பத்தினர். ஆனால் வலிக்கான காரணத்தை கண்டறியமுடியவில்லை.

இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை மருத்துவர்களின் அறிவுறுத்துதல்படி சிறுமிக்கு ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.அப்போதொழுது தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது,அந்த சிறுமியின் முதுகுத்தண்டு 80 டிகிரி கோணத்தில் வளைந்திருப்பது தெரியவந்தது.

முதுகுத்தண்டு வளைந்துருப்பதன் காரணாமாக சிறுமியின் இயல்பு வாழ்கை பாதித்தது , நிமிர்ந்து நிக்கக்கூட சிரமப்பட்டதாக கூறுகிறார் அவரின் தாய்.

சோஃபியின் முதுகுத்தண்டு மேலும் வளைந்து விடும் அபாயம் இருப்பதால் விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கான போதுமான பணம் இல்லாததால் உதவி கோரியுள்ளனர். இதை இப்படியே விட்டுவிட்டாலோ அல்லது தாமதித்தாலோ அது சிறுமின் உள்ளுறுப்புகள் பாதிக்கும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.