Friday, July 18, 2025

மணமகனை அழவைத்த மணமகள்

https://www.instagram.com/p/CB-qb2HFrpA/?utm_source=ig_web_copy_link

திருமணத்தின்போது மணமகன் அழுத வீடியோ இணையத்தில் வைரலானது.

இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் மணமகன் அழும் காட்சி இடம்பெற்றுள்ளது.

பொதுவாக, இந்தியத் திருமணங்கள் வேடிக்கையாகவும், விநோதமாகவும் நடைபெறுவது வழக்கம். திருமண நேரத்தில் மணப்பெண் தன் பெற்றோருடனும் சகோதர சகோதரிகளுடனும் வாழ்ந்த காலத்தையும், திருமணத்துக்குப் பிறகு அவர்களைப் பிரிந்துவாழப் போகும் காலத்தையும் எண்ணிக் கண்ணீர் கலங்குவாள். மணமகனோ தனக்கு வாழ்க்கைத் துணை கிடைத்துவிட்டாள் என்கிற மகிழ்ச்சியில் பெருமையோடு இருப்பார்.

ஆனால், அதற்கு மாறாக மணமகன் அழுவதுபோன்ற வைரல் வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதுதொடர்பாக வெளியான அந்த வீடியோவில் திருமணம் முடிந்து மறுவீட்டுக்குச் செல்வதற்காகக் மணமக்கள் காரில் ஏறும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த சமயத்தில் மணமக்கள் அமர்ந்திருக்கின்றனர்.

தன்னைக் கேலிசெய்யும் உறவினர்களிடம் மணமகள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியோடும் பிரியா விடைகொடுக்கிறார்.

அதேசமயம், மணமகன் கண்ணைக் கசக்கி அழுவதுபோல் கண்சிமிட்டி வேடிக்கையாக நடந்துகொள்கிறார்.

அவர் அழுவதைப் பார்த்த உறவினர்கள் கண்கலங்க, மணமகளோ சிரித்தபடி தனது கணவனின் கன்னத்தில் செல்லமாகத் தட்டுகிறாள். செல்ல அறையைப் பெற்றுக்கொண்ட மணமகனும் செல்லமாக சிரிக்கிறார்.

இந்தப் பெண் குடும்ப வாழ்க்கையில் தன் கணவனைக் கண்கலங்காமல் பார்த்துக்கொண்டால் சரிதான்….

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news