மனிதனுக்கு பரவியது “பறவை காய்ச்சல்” 

493
Advertisement

சீனாவில் நான்கு வயது சிறுவன் ஒருவனுக்கு பறவை காய்ச்சல் பரவியிருப்பதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் 4 வயது சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த காய்ச்சலின் அறிகுறிகள் பறவை காய்ச்சலின் அறிகுறிகலாக இருந்துள்ளது. பின்னர் பறவை காய்ச்சலின் ‘எச்3 என்8’ திரிபு முதல் முறையாக மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ளது என தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் காகங்கள் மூலம் பறவை காய்ச்சல் பரவி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.மேலும்  எச்3 என்8 பறவை காய்ச்சல் வைரஸ் மக்களிடையே பரவுதற்கான ஆபத்து குறைவாகவே உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே சிறுவரின் தொடர்பில் இருந்தவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.