இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருந்து இறை தரிசனம் கண்டு ஈகை திருநாளை கொண்டாடுகின்றனர். நோன்பு தொடங்கும் முன்பாக உணவு உண்ணும் நேரம் ஸஹர் என்றும் நோன்பு முடிந்து சூரியன் மறைந்த பின்னர் நோன்பு திறப்பதற்கு இப்தார் என்றும் கூறுகின்றனர்.
இணையத்தில் இஸ்லாமியர் ஒருவர் பகிர்ந்த பதிவு வைரலாகி வருகிறது.அதில் சதாப்தி ரயிலில் பயணித்த இஸ்லாமியர் ஒருவருக்கு இப்தார் நோன்பு திறப்பதற்கு ரயில்வே ,சமோசா உள்பட பலவகை பழங்கள் அடங்கிய இப்தார் உணவை வழங்கியுள்ளது.
இந்திய இரயில்வேயின் இந்த செயல் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துவருகிறது.இந்த பதிவு வைரலாகியதை அடுத்து , மத்திய அமைச்சர் உள்ளிட்ட நெட்டிசன்கள் இரயில்வேயின் இந்த செயலுக்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த பதிவை பகிர்ந்த அந்த நபர் தெரிவிக்கையில், “இந்தியன் ரயில்வேக்கு இப்தாருக்கு நன்றி. நான் ஜார்கண்ட் மாநிலம் , தன்பாத்தில் ஹவுரா சதாப்தியில் ஏறியவுடன், எனது சிற்றுண்டியை இரயில்வே பணியாளர் கொண்டுவந்தார். நான் நோன்பு இருப்பதால், தாமதமாக தேநீர் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டேன்.
நான் நோன்பு இருப்பதை கேட்டு தெரிந்துகொண்ட அந்த நபர் சென்றுவிட்டார்.பின் சிறிது நேரத்தில் மற்றொரு பணியாளர் கையில் நோன்பு திறப்பதற்கு சமோசா ,பலவகையான பழங்கள் அடங்கிய தட்டை கொண்டுவந்து கொடுத்தார். என அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் .