Thursday, December 26, 2024

தோனியை நேசிக்கும் பாகிஸ்தான் ரசிகர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய ஆலோசகருமான மகேந்திர சிங் தோனியை நேசிப்பதாக பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் கூறியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவிலிருந்து பிரிந்துசென்ற நாடுதான் பாகிஸ்தான் என்றபோதிலும், இரு நாடுகளுக்கிடையே கிரிக்கெட் போட்டி நடைபெறும்போது வேறெந்த நாடுகளுக்கிடையேயான போட்டியைவிட அதிக முக்கியத்தும் பெற்றுவிடுகிறது.

அந்த வகையில், பாகிஸ்தான் ரசிகரான முகமது பஷிர், ”பாகிஸ்தான் அணி வெற்றி பெறவே விரும்புவேன். ஆனால், Dhoni I Love You From My Heart.பாகிஸ்தான் அணிக்கும் தோனிக்கும் நான் ஆதரவு அளிப்பதைப் பார்த்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சிரித்துக்கொண்டே என்னைத் ‘துரோகி’ என்றார்கள். அது எனக்குப் பழகிவிட்டது. மனித நேயமே பிரதானம் என்ற முறையில் இரு நாடுகளையும் நேசிக்கிறேன்” என்றுகூறி கிரிக்கெட் உலகை நெகிழ வைத்துள்ளார்.

பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்துவரும் அந்த ரசிகர் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் போட்டியை மைதானத்துக்குச் சென்று கண்டு ரசிக்கத் தொடங்கினார்.

அன்றிலிருந்து இந்த இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் அத்தனைக் கிரிக்கெட் போட்டிகளையும் மைதானத்துக்கே சென்று ரசித்து வருகிறார். அதனால், 2011க்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் போட்டி எங்கு நடைபெற்றாலும், அதனைக் காண முகமது பஷிருக்கு விமான டிக்கெட்டை வாங்கி இலவசமாகக் கொடுத்துவருகிறார் தல தோனி.

”அவ்வப்போது தோனிக்கு மெசேஜ் அனுப்பி நட்பைத் தொடர்கிறேன். தோனி மனித நேயம் மிக்கவர். எனக்கு இலவசமாக டிக்கெட் கொடுப்பதைப் பெரும் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்” என்று கூறியுள்ளார் ‘சாச்சா சிகோகோ’ என்று அன்போடு அழைக்கப்படும் முகமது பஷிர்.

நாடு கடந்து உள்ளங்களை கிரிக்கெட் இணைக்கிறது.

Latest news