சாப்பிடும் போட்டியில் சிறுவனை அவனது செல்லப்பிராணி வென்றுள்ளது.
அலாஸ்கா நாட்டிலுள்ள அங்கோரே என்னும் நகரில் ஹுமன் என்னும் சிறுவனுக்கும் அவனது செல்லப் பிராணிக்கும் இடையே சாப்பாடு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதையடுத்து இருவரும் சாப்பாட்டு மேஜைமுன் அமர்ந்தனர்.
இருவர் முன்பும் தனித்தனியே நூடுல்ஸ் நிரம்பிய சாப்பாட்டுத் தட்டு வைக்கப்பட்டது.
போட்டியை ஆரம்பிக்கும்விதமாக ஹுமன் ஒன் டூ த்ரி சொன்னான். சொல்லி முடித்த உடனே பறந்து பறந்து நூடுல்ஸை சாப்பிடத் தொடங்கியது செல்லப்பிராணி.
சில விநாடிகளிலேயே தன்னுடைய தட்டிலுள்ள நூடுல்ஸ் முழுவதையும் சாப்பிட்டு முடித்துவிட்டது. அதுமட்டுமல்லாமல், ஹுமனின் தட்டிலுள்ள நூடுல்ஸையும் சாப்பிடத் தொடங்கியது. மேலும், இன்னொரு தட்டிலுள்ள கோழியையும் சாப்பிட்டது.
இறுதியில் ஹுமனின் செல்லப் பிராணி போட்டியில் வென்றது.
ஒரு மாணவனும் அவனது செல்லப்பிராணியும் உணவுண்ணும் போட்டியில் ஈடுபட்ட செயல் அனைவரையும் கவர்ந்துவருகிறது. முற்றிலும் மகிழ்ச்சியான இந்த நிகழ்ச்சியின் வீடியோ தற்போது ஆன்லைனில் வைரலாகி வருகிறது.