குழந்தை தவழ்வதற்குக் கற்றுக்கொடுக்கும் நாயின் செயல் தாய்மார்களை மிஞ்சிவிட்டது.
தாய்போல குழந்தைக்குத் தவழ்வதற்குக் கற்றுத்தரும் நாயின் செயல் ட்டுவிட்டரில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பொமரேனியன் நாய் பச்சிளங்குழந்தை ஒன்றுக்கு கிளிப்பிள்ளைக்குக் கற்றுத்தருவதுபோல செயல்பட்டுக் கற்றுத் தருகிறது.
செல்லப் பிராணியின் இந்தச் செயல் மனிதர்களின் இதயத்தை வருடுகின்றன.
காலங்காலமாக மனிதர்களின் செல்லப் பிராணிகளாக நாய்கள் வலம்வருகின்றன. ஆபத்தான நேரத்தில் எஜமானரின் உயிரைக் காப்பாற்றுவது, இக்கட்டான நேரத்தல் இடையூறுகளைக் களைவது, அன்றாட வேலைகளில் அயராமல் உதவுவது என்று செல்லப் பிராணிகளின் செயல்களையும், நன்றியோடு செயல்படும் குணாதிசயங்களையும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
ஆனால், ஒரு தாயின் வடிவில் நாயைக் காண்பது மிகவும் அரிதான ஒன்று. சிறுவயதில் குழந்தைக்குத் தாய்தான் சகல விஷயங்களையும் கற்றுத் தருவார். அப்படியொரு தாய்போல குழந்தை எப்படித் தவழவேண்டும் என்பதை தவழ்ந்து காட்டி பொமரேனியன் நாய் சொல்லித்தருவதை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
தாயைவிட மேலான இந்த பொமரேனியனிடம் இன்னும் என்னென்ன உயர்வான குணங்கள் உள்ளனவோ…