இறைச்சிக்காக பசுக்களை கடத்தும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில்.ஹரியானா மாநிலம் குருகிராமில் பசுக்களை கடத்தி சென்றவர்களை 22 கிலோமீட்டர் தூரம் சினிமா பாணியில் வாகனத்தை துரத்திச்சென்று பிடித்தனர் அம்மாநில காவல்துறை.
குருகிராமில் ,இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள், குறிப்பிட்ட பகுதியில் இருந்து 7 பசு மாடுகளை ஒரு வண்டியில் கடத்தியுள்ளனர். இது அப்பகுதி மக்களுக்கு தெரியவர , கடத்தல்காரர்களை பிடிக்க முயற்சிக்க , வேகமாக அங்கிருந்து கடத்தல்காரர்கள் நெடுஞ்சாலைக்கு வந்துவிட்டனர் .
இரவு நேரம் என்பதால் போக்குவரத்துசெருசல் இல்லாதநிலையில், அதிவேகத்தில் வண்டியை ஓட்டியபடி சென்றுகொண்டுருந்த கடத்தல்காரர்களை, மாட்டின் உரிமையாளர்கள் சிலர் 3 கார்களில் துரத்தியுள்ளனர்.
இருந்தும் அவர்களால் கடத்தல்காரர்களை பிடிக்கமுடியவில்லை , கடத்தல்காரர்களை நோக்கி உரிமையாளர்கள் துப்பாக்கியால் சுடுவதும் ,பதிலுக்கு கடத்தல்கார்கள் சுடுவதும் , படக்காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு நடைபெற்ற சேசிங் வீடியோவில் பதிவாகியுள்ளது.இதெற்கிடையில் காவல்கட்டுப்பட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு.
காவல்துறையினரும் கடத்தல்காரர்களை பின்தொடர்ந்துள்ளனர் அத்துடன் கடத்தல் வாகனத்தின் மீது துப்பாக்கிசூடு நடத்தினர்.
இருபுறமும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில் , வண்டில் இருந்த 7 பசுக்களை ஒவொன்றாக கீழே தள்ளினர் கடத்தல்காரர். ஒருகட்டத்தில் கடத்தல்காரர்கள் மடக்கி பிடித்து கைது செய்தனர் காவலர்கள்.
இது குறித்து காவல்துறை தெரிவிக்கையில் , அடையாளம் தெரியாத நபர்களால் 7 பசுமாடுகள் கடத்திச்சென்றுள்ளனர்.காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைக்க , கடத்தல்காரர்களை துரத்திச்சென்று பிடித்தானோம்.கீழே தள்ளப்பட்ட மாடுகளில் 2 மாடுகள் காயமடைந்துள்ளது.
கடத்தல்காரர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் ,” ஹரியானா கவுவன்ஷ் சன்ரக்ஷன் மற்றும் கௌசம்வர்தன் சட்டம், 2015, பிரிவு 13(2) (கொலை நோக்கத்திற்காக பசுவை ஏற்றுமதி செய்வதற்கான தண்டனை) மற்றும் பிரிவு 307 (கொலை முயற்சிக்கான தண்டனை) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
ஹரியானாவில் பசு கடத்தலுக்கு எதிராக கடுமையான சட்டம் உள்ளது. மாநில அரசும் பசுக்களைப் பாதுகாப்பதற்காக ஒரு ஆணையத்தை அமைத்துள்ளது, ஆனால் இந்த முயற்சிகள் இருந்தபோதிலும்,அம்மாநிலத்தில் பசுக் கடத்தல் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.