தலைமைச் செயலகத்தில் இ – அலுவலக முறைக்கு மாற்றும் பணி

289
Advertisement

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் மின்னணு அலுவலக முறைக்கு மாற்ற கடந்த சில மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தற்போது மின்னணு அலுவலக முறைக்கு மாற்றம் செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதல்கட்டமாக முதலமைச்சர் அலுவலகம், தகவல் தொழில்நுட்பம், வருவாய் உள்ளிட்ட 6 துறை இ-அலுவலகமாக மாற்றப்பட உள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இனி Digital Tamilnadu என்ற முறையில் அரசு அலுவலகங்களை கணினிமயமாக்கப்படும் பணியில் தமிழக அரசு மும்மரம் காண்பித்து வருகிறது. இ – அலுவலகம் என்பது எங்கிருந்து வேணாலும் பணியாற்றலாம் என்பதாகும்.

எங்கிருந்தாலும் பணியாற்றும் வகையில், அரசு அமைப்புகள், முக்கிய அலுவலகங்கள் என 500க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் இ – அலுவலகமாக மாற்றும் பணிகள் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்து தற்போது நிறைவு பெற்றுள்ளது.

பழைய கோப்புகளை இணையதளத்தில் பதிவேற்ற ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்த அலுவலகங்களை மாற்றும் பணியை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மேற்கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.