அக்கா_தங்கை பாசத்தை அளவிட்டு சொல்லவே முடியாது. அக்காக்கள் தங்கைகளுக்கு பல நேரங்களில் அம்மாவாகவும் ஆகிவிடுகிறார்கள். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டாலும் தன் தங்கையை குழந்தையைப் போல் பார்த்துக்கொள்ளும் இன்னொரு தாய் என்றே அக்காவைச் சொல்லலாம்.
இதுவே இருவருமே குழந்தையாக இருந்தால் சொல்லவே வேண்டாம். இங்கேயும் அப்படித்தான் , அக்காவிற்கு 10 வயது தான் ஆகிறது.
ஆம் ,10 வயது சிறுமி தன் உடன் பிறந்த சகோதிரையை தாய் போல் பராமரிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
மணிப்பூரின் அமைச்சர் ஒருவர் தன் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார். அதில் , 10 வயதான பள்ளிக்கு செல்லும் சிறுமி , தன் சகோதிரியை தோளில் சுமந்து தன் உடன் கூட்டிச்செல்கிறார்.சிறுமின் பெற்றோர் விவசாயம் வேலை செய்வதற்காக சென்றுவிடுவதால் தன் சகோதிரியை பள்ளிக்கு அழைத்துவருவதாகவும் , வகுப்பு அறையில் சிறுமி தன் சகோதிரியை மடியில் வைத்தபடியே பாடங்களை பயணித்து கொள்கிறார் என இப்புகைப்படத்தை பகிர்ந்த அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/BiswajitThongam/status/1510245692257697794/photo/1
மேலும்
“கல்விக்கான அவளது அர்ப்பணிப்பு என்னை வியக்க வைத்தது! மணிப்பூரின் தமெங்லாங்கைச் சேர்ந்த மைனிங்சின்லியு பமேய் என்ற இந்த 10 வயது சிறுமி தனது தங்கையை பார்த்துக்கொண்டே பள்ளியில் படிக்கிறார், ஏனெனில் அவரது பெற்றோர்கள் விவசாய வேலைக்கு சென்றுவிடுவார்கள் என்கிறார்.
இப்புகைப்படும் பார்ப்பவர்களின் இதயங்களை உருகச்செய்துள்ளது.