அதிகாரிகள் செய்த தவறால் சிறுமிக்கு ஆரம்பப்பள்ளியில் இடம் மறுப்பு !

390
Advertisement

உத்தரபிரதேசம் மாநிலம் அரசுப் பள்ளியில் குழந்தைக்கு அசாதாரண பெயர் உள்ளதாக காரணம் காட்டி  குழந்தைக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

ஆதார் அட்டையில் குழந்தையின் பெயர் ‘பேபி ஃபைவ் ஆஃப் மது’ என அச்சிடப்பட்டுஉள்ளது .அதாவது ஆதார் அட்டையில் குழந்தையில் பெயர் இடம்பெறவேண்டிய இடத்தில் “மதுவின் ஐந்தாவது குழந்தை” என அச்சிடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம்  ராய்பூர் கிராமத்தில் வசிக்கும் தினேஷ், தனது மகள் ஆர்த்தியை ஆரம்பப் பள்ளியில் சேர்க்க சென்றபோது , குழந்தையின் ஆதார் அட்டையில் உள்ள பெயரை கண்டு ,அப்பள்ளி ஆசிரியர் குழந்தைக்கு அனுமதி  மறுத்ததாக  தெரிகிறது.

மற்றும் அட்டையில்  ஆதார் எண் இல்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது. ஆதார் அட்டையை சரி செய்யுமாறு ஆசிரியர் தினேஷிடம் கூறி அனுப்பியுள்ளார்.

இது குறித்து சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரான  தீபா ரஞ்சன் கூறுகையில், “அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் ஆதார் அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. அலட்சியத்தால் தவறு நடந்துள்ளது. வங்கி மற்றும் தபால் நிலைய அதிகாரிகளை எச்சரித்து, அலட்சியத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.