Friday, December 27, 2024

பெட்ரோல் தட்டுப்பாடு: இளைஞர் செய்த நூதனச் செயல்

https://www.instagram.com/reel/CUakhyNF477/?utm_source=ig_web_copy_link

பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக இளைஞர் ஒருவர் குதிரையில் பெட்ரோல் பங்குக்கு வந்தது ஆன்லைனில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

இங்கிலாந்தில் சமீபகாலமாகப் பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே பெருங்கூட்டம் காத்திருக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து வருகின்றன.

அந்நாட்டில் பெட்ரோலுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது. அதன்காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகளில் வாகனங்கள் நீண்டதூரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கவலையடைந்துள்ளனர். பல மணி நேரம் காத்திருந்து தண்ணீர்ப் பாட்டில்களில் மட்டுமே பெட்ரோலைப் பெற்றுச்செல்கின்றனர்.

இந்த நிலையில், காரில் சென்று பெட்ரோல் பங்கில் பல மணி நேரம் காத்திருப்பதைத் தவிர்க்க விரும்பிய கஸ் லீ டால்பின் என்ற இளைஞர் குதிரையில் சென்றுள்ளார். அதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கஸ் லீ. இது இங்கிலாந்து நாட்டில் வைரலாகியுள்ளது.

பெட்ரோல் தட்டுப்பாட்டுக்கு மிக முக்கியக் காரணமாகக் கூறப்படுவது டிரைவர்கள் இன்மையே. ஒரு லட்சத்துக்கும் அதிகமான டிரக் டிரைவர்கள் பற்றாக்குறை அங்குள்ளது.. இது மற்ற பொருட்களுடன் பெட்ரோல் விநியோகத்தையும் சீர்குலைத்துள்ளது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறியது லாரி ஓட்டுநர்கள் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான ஓட்டுநர்கள் இங்கிலாந்தைவிட்டு வெளியேறி வேறிடங்களில் வேலைசெய்கின்றனர்

Latest news