வீட்டை வேகமாக கடக்கும் கார்களை  புத்திசாலித்தனமாக கட்டுப்படுத்திய உரிமையாளர்

425
Advertisement

நகரின் முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் மட்டும் அல்லாமல் குடியிருப்பு பகுதிகள் அதிகம் நிறைந்த பகுதிகளிலும் கூட வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி செல்லக்கூடிய சூழல் தான் எங்கும் உள்ளது.

அதில் குறிப்பாக சில கார்கள் ஓட்டுனர்கள்  ஏதோ , வான்வெளியில் விமானத்தை ஓடுவது போல  ஓட்டிச்செல்வர். இது போன்ற நேரங்களில் அருகில் உள்ள வீடுகளில் முதியவர்கள் அல்லது நோய்வாய்ப்பட்டு உள்ளவர்கள் இதன் மூலம் அசௌகரியமாக உணருவர், பலருக்கும் இது எரிச்சலூட்டும் வகையில் இருக்கும்..

மட்டுமல்லாமல் , குழந்தைகள் வீட்டின் வெளியில் சுதந்திரமாக விளையாடுவது கூட ஆபத்தில் முடியும் அபாயம் உள்ளது.இந்நிலையில் போக்குவரத்துத் தொழில்நுட்பம் மற்றும் வேகக் கமெராவின் முன்னேற்றங்கள் பல நாடுகளில் தேவையற்ற வேகத்தின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முடிந்தாலும், உலகெங்கிலும் உள்ள சிறிய நகரங்களிலும் இதே நிலைதான் உள்ளது.

இங்கிலாந்தின் ஸ்டோக்-ஆன்-ட்ரெண்ட் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் , தன் வீட்டின் அருகில் உள்ள சாலைகளில் காரை அதிவேகமாக ஓட்டிச்செல்லும் ஓட்டுனர்களை முட்டாளாக்கி கார்களின் வேகத்தை குறைக்க புத்திசாலித்தனமாக ஒரு காரியத்தை செய்துள்ளார்.

அந்த நபரின் முயற்சியால் அவரின் வீட்டை கடந்து செல்லும் கார்கள் வேகத்தை குறைத்து  தான் கடந்து செல்லகிறது. அப்படி அவர் என்ன செய்தார் என்பதை பார்ப்போம் வாங்க,

தன் வீட்டை கடந்து செல்லும் கார்கள் அதிவேகத்தில் செல்வதை கட்டுப்படுத்த நினைத்த அவர் , வீட்டின் அருகே காவல்துறை ரோந்து வாகனத்தை குறிக்கும் ஸ்டிக்கர்கள் மற்றும் போஸ்டர்கள் அடங்கிய போலி வேகக் கேமரா வேனை நிறுத்து வைத்துள்ளார்.

இவரின் புத்திசாலித்தனமான இந்த முயற்சி பலனளிக்கிறது என்கிறார்கள் அப்பகுதி மக்கள். இது குறித்து அந்நகர பகுதி காவல்துறை கூறுகையில் , ராபின் என்ற அந்த நபர்  எந்த சட்டத்தையும் மீறவில்லை பாதுகாப்பான சாலைகள் கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, சாலைப் பாதுகாப்பைச் சுற்றியுள்ள விஷயங்கள் தொடர்பாக பொதுமக்களின்  கருத்துக்களை வரவேற்கிறது மற்றும் ஊக்குவிக்கிறது என காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.