Wednesday, January 15, 2025

டைட்டானிக்கை  மிஞ்சிய  ‘வொண்டர் ஆப் தி சீஸ்’  எலக்ட்ரிக் கப்பல்

உலகின் மிகப்பெரிய மின்சார பயணக் கப்பல் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது. சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் உள்ள யிச்சாங்கில் உள்ள துறைமுகத்தில் யாங்சே ஆற்றில் வலம் வந்து தனது முதல் பயணத்தை தொடங்கியது ‘வொண்டர் ஆப் தி சீஸ்’ இறுதி கட்ட தயாரிப்பு பணிகள் ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள மார்செயிலில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த பணிகள் அனைத்தும் நிறைவுற்று பயணத்தை தொடங்கியுள்ளது. ஒண்டர் ஆஃப் தி சீஸ் கப்பலின் ஒட்டுமொத்த எடை 2,36,857 டன் ஆகும்.

உண்மையில் இது மிக அதிக எடையாகும். இந்த அதிகபட்ச அளவின் காரணத்தினால் முன்னதாக மிக உலகின் மிக பெரிய கப்பல் என்ற மகுடத்தைச் சூடியிருந்த சிம்பொனி ஆஃப் தி சீஸ், தனது பட்டத்தை தற்போது  இழந்திருக்கின்றது.இக்கப்பலில் ஒரே நேரத்தில் 6,988 பயணிகள் பயணிக்க முடியும்.ஒட்டுமொத்தமாக 1,188 அடி நீளத்தில் இக்கப்பல் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி 100 கேபின்கள் இக்கப்பலில் உள்ளன.

மேலும், ஓர் நட்சத்திர விடுதியில் இருப்பதைக் காட்டிலும் அதிக சொகுசான மற்றும் பொழுதுபோக்குகளை வழங்கும் வகையில் இக்கப்பல்  வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதன்படி, நீச்சல் குளம், பார் மற்றும் சன் லவுஞ்சர்களுடன் கூடிய பிரத்யேக டெக் உள்ளிட்டவையும் இந்த கப்பலில் இடம் பெற்றிருக்கின்றன.

Latest news