புதுமணப்பெண் படுக்கையறையில் மதுவிலக்குப் போலீஸ் சோதனை; மாமியார் மயக்கம்

276
Advertisement

புதுமணப்பெண்ணின் படுக்கையறையில் மதுவிலக்குப் போலீசார் நடத்திய சோதனையால் மாமியார் மயக்கமடைந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலத் தலைநகர் பாட்னா அருகே ஹாஜிபூர் நகரிலுள்ள ஹத்ஷர் கஞ்ச் பகுதியில் சில மாதங்களுக்குமுன்பு மண்டபத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே திருமண வீட்டார் வீட்டுக்குள் புகுந்த அம்மாநிலப் போலீசார் மதுபானப் பாட்டில்கள் உள்ளதா என்று சோதனையில் ஈடுபட்டனர்.

பெண் போலீசார் எவரும் உடனின்றி, மருமகளின் படுக்கையறைக்குள் அதிரடியாகப் புகுந்து ஆண் போலீசார் மதுபான சோதனை நடத்தியது, அம்மாநில மக்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

இந்த சோதனையைக் கண்டு மாமியார் அதிர்ச்சியில் மயக்கம் அடைந்துவிட்டார்.

எதன் அடிப்படையில் அவர்கள் இந்த சோதனையை மேற்கொண்டனர் என்பது தெரியவில்லை. என்றாலும், சோதனை நடைபெற்ற அந்தக் குடும்பத்தினர் எவருக்கும் மது அருந்தும் பழக்கம் இல்லையென்று கூறப்படுகிறது.

அதேசமயம், பீகார் மாநிலத்தில் 2016 ஆம் ஆண்டுமுதல் மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.