உலகின் முதல் SMS இதுதான்

233
Advertisement

உலகின் முதல் SMS ஆன கிறிஸ்துமஸ் வாழ்த்து 85 லட்ச ரூபாய்க்கு ஏலம்போயுள்ளது.

கடிதங்கள் எழுதும் வழக்கம் இமெயில், பேஜர், செல்போன் கண்டுபிடிக்கப்பட்டதும் முற்றிலும் ஒழிந்துவிட்டது. எந்தத் தகவலையும் பரிமாறுவதற்குத் தற்போது செல்போனே பயன்படுகிறது. அந்த வகையில், உலகில் முதன்முதலாக அனுப்பப்பட்டது கிறிஸ்துமஸ் வாழ்த்து என்பது தெரியவந்துள்ளது.

மேரி கிறிஸ்துமஸ் என்ற அந்த வாழ்த்துத் தகவலை வோடபோன் நிறுவனத்தில் பணியாற்றிய பொறியாளர் இங்கிலாந்திலுள்ள தங்கள் நிறுவனத்தின் மேலாளருக்கு 1992 ஆம் ஆண்டு, டிசம்பர் 3 ஆம் தேதி அனுப்பியுள்ளார்.

அந்தத் தகவலைப் பிரிட்டிஷ் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன், பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் நகரில் ஏலம்விட்டபோது, ஒரு லட்சத்து 7 ஆயிரம் யூரோவுக்கு வாங்கியுள்ளார் ஒருவர்.

இந்தத் தொகை இந்திய மதிப்பில் சுமார் 85 லட்ச ரூபாய்க்கு சமம் ஆகும்.

வாட்ஸ் அப் பயன்பாட்டுக்கு வந்தபிறகு, குறுந்தகவல் அனுப்பும் வழக்கம் கணிசமான அளவில் குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.