Thursday, December 26, 2024

கொரோனா,போர் தப்பிக்க பலே ஐடியாவுடன் களமிறங்கிய பெண்

மனிதனால் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வரும் உலகம் வெப்பமயமாதல், காற்று மாசு, அணு உலை, போர், தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல காரணங்களால் பேரழிவுக்கு ஆளாகலாம் என  பலரும் எதிர்பார்க்க இயற்கையை அழித்து வரும் மனித இனத்தால் அவ்வப்போது கணிக்கவே முடியாத இயற்கை சீற்றங்களும்  ஏராளமாகவே  நடந்து வருகின்றன. பேரழிவில் இருந்து தப்பிப்பதற்காக 38 வயதான பெண்மணி ஒருவர் வீட்டில் பலே ஐடியாவுடன்  பதுங்குகுழி ஒன்றை வடிவமைத்த விநோத சம்பவம் சோசியல் மீடியாவில்  தற்போது  வைரலாகி வருகிறது.

38 வயதான ரோவன் மெக்கென்சி என்பவர் டிக்-டாக்கில் தனது பதுங்கு குழி பற்றி வெளியிட்ட ஒரே ஒரு வீடியோ மூலமாக உலக பேமஸ் ஆகி டிக்-டாக் செலிபிரிட்டியாகவும் கலக்கி வருகிறார். ஹாலிவுட் படங்களில் காண்பிப்பது போல் உலகம் என்றாவது ஒருநாள் பேரழிவை சந்திக்க நேர்ந்தால் எப்படி நம்மை காத்துக்கொள்வது? என்ற சந்தேகத்தில் அனைவருக்கும்  11 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியுள்ளது.எனவே எப்படிப்பட்ட பேரழிவு ஏற்பட்டாலும் தன்னை காத்துக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்து, தனது வீட்டின் அடித்தளத்தில் பங்கர் எனப்படும் பதுங்கு குழியை உருவாக்கியதோடு அதில் இரண்டு ஆண்டுகளுக்குத் போதுமான அளவு தண்ணீர் மற்றும் உணவு பொருட்களை சேமித்து வைத்திருக்கிறார்.

இதன் கட்டுமானத்திற்காக 7 ஆயிரத்து 650 கிலோ எடையுள்ள பொருட்களை பயன்படுத்தியிருக்கிறார்.மேலும் பல்வேறு சோதனைகளை முயற்சித்து, நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க கூடிய, உணவு பொருட்களை முறையாக சேமித்து வைக்கவும் கற்றுக்கொண்டுள்ளார். ஒரு குடும்பத்திற்கு 3 முதல் 2 ஆண்டுகளுக்கு தேவையான அரிசி, பீன்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் தண்ணீரையும்  சேமித்து வைத்துள்ளார்.அடுத்த நாள் என்ன நடக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரியாது. அழிவுக்கான நாளை எதிர்கொள்ள அனைவருமே தயாராக இருப்பது நல்லது தான்  ஆனால் இப்படி தயார்ப்படுத்தி வைத்துக்கொள்வது நல்லது தானா…!

Latest news