தன் சகோதரனைத் தன் தலையில் தலைகீழாக சுமந்துசென்று அரிய சாதனை படைத்துள்ள இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்பெயின் நாட்டின் ஜிரோனா நகரிலுள்ள செயின்ட் மேரிஸ் கதீட்ரலில் சமீபத்தில் கழைக்கூத்துப் போட்டி நடத்தப்பட்டது. இதில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த சர்க்கஸ் சகோதரர்களான ஜியாங் குவோக் கோ, ஜியாங் குவோக் என்கிப் ஆகிய இருவரும் கலந்துகொண்டனர்.
போட்டி தொடங்கியதும் நிழல்பிம்பம்போல ஒருவர் மற்றொருவரை சுமந்து சென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டார். அதாவது, ஒரு சகோதரர் நேராக நிற்க, அவரின் தலைமீது இன்னொரு சகோதரர் தலைகீழாக நின்றுகொண்ட நிலையில், 53 விநாடிகளில் 100 படிகளின்மீது ஏறிச்சென்று விந்தையான செயலைச் செய்தார்.
ஐந்தாண்lடுகளுக்குமுன்பும் இதே சாதனையைப் புரிந்தனர் இந்தச் சகோதரர்கள். அப்போது இதேபோன்று 52 விநாடிகளில் 90 படிகளைக் கடந்துள்ளனர். தற்போது ஒரு விநாடி கூடுதலான நேரத்தில் கூடுதலாக 10 படிகளைக் கடந்து தங்கள் முந்தைய சாதனையை முறியடித்துள்ளனர்.
கண்மூடித்தனமான சாதனை புரிந்த இந்த இளைஞரின் வியத்தகு கூத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
கழைக்கூத்தை மயிர்க்கூச்செரியச் செய்துள்ளனர் இந்த சகோதரர்கள்.