Wednesday, January 15, 2025

நீச்சல் குளத்தில் நீந்தி விளையாடும் குதிரை வைரல் வீடியோ

மனிதர்கள் நீச்சல் குளத்தில் குளிப்பதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு குதிரை அவ்வாறு செய்தால். ஆம், பிரவுன் நிற குதிரை ஒன்று, மனிதர்கள் ஆனந்த குளியலிடும் நீச்சல் குளத்தில் லாவகமாக நீந்தி மகிழ்கிறது. அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர்.குதிரைகள் நீருக்கடியில் சுவாசிக்க முடியாததால், அவை இயற்கையாகவே தங்கள் தலையை மேற்பரப்பிற்கு மேலே வைத்திருக்கின்றன.

https://www.instagram.com/p/CbU5Jz9l-DB/

இந்த வீடியோவிலும் அந்த குதிரை தனது தலையை நீருக்கு மேலே வைத்தபடி கேமராவுக்கு போஸ் கொடுத்துள்ளது.குதிரைகளை பயிற்றுவிக்கும் பயிற்சியாளர் ஒருவர் இந்த குதிரைக்கு நீச்சல் பயிற்சி கொடுத்துள்ளார். இதன்மூலம், பெரும்பாலான குதிரைகள் உடற்தகுதி மற்றும் தடகள செயல்திறன் ஆகியவற்றில் ஒரு பரந்த முன்னேற்றத்தைக் காண இத்தகைய  பயிற்சி வழிவகை  செய்கிறது . தற்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Latest news