சீனா விமானம் விபத்து எதிரொளி – தீவிர கண்காணிப்பில் இந்தியா

421
Advertisement

சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் 132 பயணிகளுடன் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதை அடுத்து, இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் , போயிங் 737 இந்திய விமானங்களை கூடுதல் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக தெரிவித்துஉள்ளது.

ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா மற்றும் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று இந்திய விமான நிறுவனங்கள் போயிங் 737 விமானங்களைக் கொண்டுள்ளன.

திங்கட்கிழமை ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் விமானப் போக்குவரத்து ஆணைய தலைவர் அருண் குமார் கூறுகையில் ,

“விமானப் பாதுகாப்பு என்பது தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டியவை , நிலைமையை உன்னிப்பாக ஆய்வு செய்து வருகிறோம் மேலும் போயிங் 737 இந்திய விமானங்களை கூடுதல் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக தெரிவித்தார்.

குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸின் போயிங் 737-800 ரக விமானம் வுஜோ நகரில் உள்ள டெங்சியான் கவுண்டியில் விழுந்து நொறுங்கியது.

சீனாவின் மூன்று முக்கிய விமான நிறுவனங்களில் ஒன்றான சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், திங்கள்கிழமை விபத்துக்குப் பிறகு அதன் அனைத்து போயிங் 737-800 விமானங்களையும் தரையிறக்கியுள்ளது.

விபத்துக்குள்ளான சீன பயணிகள் விமானத்தில் 123 பயணிகள் மற்றும் ஒன்பது பணியாளர்கள் பயணித்ததாகவும் ,அதில் வெளிநாட்டினர் யாரும் இல்லை என்று அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், இந்த விவகாரம் தொடர்பாக பிடிஐயின் கேள்விக்கு பதிலளிக்கவில்லை.

அக்டோபர் 2018 முதல் மார்ச் 2019 வரையிலான ஆறு மாத காலப்பகுதியில் இரண்டு போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் விபத்தில் சிக்கி மொத்தம் 346 பேர் உயிரிழந்தனர். இந்த இரண்டு விபத்துகளைத் தொடர்ந்து, டிஜிசிஏ மார்ச் 2019 இல் இந்தியாவில் போயிங் 737 மேக்ஸ் விமானங்களைத் தடை செய்தது.

டிஜிசிஏ க்கு திருப்தி அளிக்கும் வகையில் போயிங் தேவையான மென்பொருள் திருத்தங்களைச் செய்த பின்னர், விமானத்தின் வணிகச் செயல்பாடுகள் மீதான தடை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 மாதங்களுக்குப் பிறகு நீக்கப்பட்டது என்பதை குறிப்பிடத்தக்கது.