கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவுகளில் ஒன்று புட்டு. அங்கு இருக்கும் அதிகப் பேருக்கு இது மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்று. என்னதான் நமக்கு பிடித்தமான உணவு என்றாலும் அதை தினமும் சாப்பிட முடியுமா? அந்த உணவே நமக்கு பிடிக்காத உணவாக மாறிவிடும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக ஒரு பதிவு ஒன்றை ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் ஒரு படம் இடம்பெற்றுள்ளது. அந்தப் படத்தில் ஒரு பள்ளி கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது. அதில், உங்களுக்கு பிடிக்காத உணவு குறித்து எழுத வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு சிறுவன் ஒருவன் எழுதிய விடை தான் தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அச்சிறுவன் எழுதிய விடை, “எனக்கு மிகவும் பிடிக்காத உணவு புட்டு தான். புட்டு என்பது ஒரு கேரளா உணவு. இந்த உணவை அரிசி மாவு வைத்து செய்ய முடியும். இது செய்வது மிகவும் எளிது என்பதால் தினமும் என்னுடைய அம்மா இதை சாப்பிட்டிற்கு செய்வார்.
அவர் செய்த ஒரு 5 நிமிடங்களில் அந்தப் பட்டு கல் போல் கடினமாக மாறிவிடும். அதன்பின்னர் அதை சாப்பிட முடியாது. எனக்கு வேறு உணவு கொடுங்கள் என்று கேட்டால் அதற்கு அவர்கள் என்னை திட்டுவார்கள். இதனால் நான் அழுது கொண்டிருப்பேன். நான் பசியுடன் கூட இருப்பேன். ஆனால் அதை கடைசி வரை சாப்பிட மாட்டேன். புட்டு அன்பை முறிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு பலரும் தங்களது மறுபாட்ட கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.