திருமணம் என்பது அனைவரின் வாழ்வில் வரும் மகிழ்ச்சியான ஓர் தருணம் , வாழ்வில் ஒருமுறை மட்டுமே நிகழும் இந்த தருணத்திற்காக வெகு சிறப்பாக , ஊரே அசந்து பார்க்கும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.
திருமணம் நிச்சியம் ஆன நாள் முதலே ஏற்பாடுகள் செய்ய துடங்கி விடுவர் இரு வீட்டார்களும் . மண்டப அலங்காரம் , விருந்து ஏற்பாடுகள் உள்ளிட்ட அந்நன்நாளில் எந்த குறையும் ஏற்பட்டிவிட கூடாது என பார்த்து பார்த்து அணைத்து ஏற்பாடுகளும் செய்வார்கள்.
இதில் ஒன்று தான் திருமண முடிந்து மணமக்கள் வீடு அழைத்து செல்லும் நடைமுறை , அதற்க்காக அலங்கரிக்கப்பட்ட காரில் புதுமண தம்பதிகள் மண்டபத்தில் இருந்து வீடு அழைத்து செல்வார்கள்.
சமீபத்தில் வீடியோ ஒன்று இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து உள்ளது. இந்த வீடியோவில் , ஓர் புதுமண தம்பதி ‘ கல் , மண் என கனத்தை எடுத்து செல்லும் கனரக வாகனமான டெர்ரஸ் லாரியில் திருமணம் முடிந்த வீடு திரும்பும் தருணத்தை பகிர்ந்துள்ளனர்.
கண்கவரும் விதம் அலங்கரிக்கப்பட்ட அந்த லாரியின் இடது பக்க முன்இருக்கையில் மணப்பெண்ணை அலேக்காக தூக்கி உட்காரவையும் மணமகன் அந்த லாரியை தானே ஓட்டிச்செல்கிறார். லாரியில் முன்னும் பின்னும் கார்கள் செல்ல மனகோலத்தில் தம்பதியினர் செல்லும் இந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.