போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா நாட்டு பிரதமர்கள் உக்ரைனுக்கு பயணம்!

403
Advertisement

போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா நாடுகளின் பிரதமர்கள் உக்ரைன் அதிபரை சந்திக்க அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

உக்ரைனின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு ஆதரவை உறுதிபடுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கம் என்று போலந்து அரசு தெரிவித்துள்ளது.

வீரர்கள் எண்ணிக்கையிலும், ஆயுதத்திலும் ரஷ்யா மிகப்பெரிய படையாக இருந்தாலும், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்குவதால், உக்ரைன் போரில் தாக்கு பிடித்து வருகிறது.

போரின் காரணமாக இதுவரை 28 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த நிலை எப்போது மாறும் என மக்கள் தவித்து வருகின்றனர்.