Saturday, December 21, 2024

Masterchef ஆன சிறுவன்

சிறுவன் ஒருவன் தலைமை சமையல் கலைஞர்போல் உணவு சமைத்த வீடியோ இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

ஓடித்திரிந்து விளையாட வேண்டிய பருவத்தில் நன்கு பக்குவப்பட்ட தலைமை சமையல் கலைஞர்போல் சிறுவன் முட்டைப் புரோட்டா சமைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது.

இதுதொடர்பாக ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் புரோட்டாவில் பிரஷ்ஷால் எண்ணெய்யைத் தடவுகிறான். பின்பு முட்டையை நன்கு கலக்கி புரோட்டாவின் நடுவில் வரும் குமிழுக்குள் சாமர்த்தியமாக ஊற்றுகிறான்.
தயக்கமும் பயமும் இன்றி சமயோசிதமாக செயல்பட்ட சிறுவனின் இந்தச் செயல் சமையல் கலைஞர்களை மட்டுமன்றி, தாய்மார்களையும் வியக்க வைத்துள்ளது.

அதேசமயம், விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது. பள்ளிக்குச் செல்லவேண்டிய தருணத்தில் குழந்தைத் தொழிலாளராக செயல்பட்டுள்ளான் என்று நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். மற்ற குழந்தைகளுடன் விளையாட வேண்டும், சமைக்கக்கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வேறுசிலரோ, நான் என் குழந்தைப் பருவத்தில் என் குடும்பத்துக்காக வேலைசெய்தேன். அது என்னை சிறந்த மனிதனாக மாற்றியது. இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Latest news