Friday, December 26, 2025

மனிதரோடு பேட்மிண்டன் விளையாடும் ரோபோ

பேட்மிண்டன் விளையாட நண்பர்கள் இல்லையே என்ற கவலை இனி வேண்டாம். மனிதர்களோடு விளையாடுவதற்கு ரோபோ வந்துவிட்டது.

இளைஞருடன் பேட்மிண்டன் விளையாடும் ரோபோவின் வீடியோ இணையத்தில் உலா வருகிறது.

குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள சயின்ஸ் சிட்டியில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், பேட்மிண்டன் மைதானத்தின் ஒருபுறம் ரோபோவும், நடுவிலுள்ள வலைக்கு மறுபுறம் ஓர் இளைஞரும் பூப்பந்து விளையாடுகின்றனர்.

வீரர்களின் கவனத்தை மட்டுமன்றி, விளையாட்டு ஆர்வலர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ள அந்த ரோபோவின் எலக்ட்ரானிக் கண்கள், ஷட்டில் காக்மீது கவனம் செலுத்துகின்றன.

அதிலுள்ள சென்சார்கள், ரோபோ விளையாட்டு மைதானத்தைச் சுற்றிவருவதற்கு உதவுகின்றன. இதனால், ஷட்டில் காக்கை சுலபமாக எதிர்கொண்டு மட்டையால் அடித்துவிரட்டுகிறது.

ரோபோவுடன் விளையாடுகிறோம் என்கிற எண்ணமேயில்லாமல், நண்பரோடு விளையாடுகிறோம் என்கிற உணர்வைத் தருகிறது இந்த ரோபோ.

இனி, எங்கேயும் எப்போதும் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளலாம்.

செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் இந்த ரோபோவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related News

Latest News