Thursday, January 15, 2026

இழந்தவன் தேடுவதும் இருப்பவன் தொலைப்பதும் ஒன்றை மட்டுமே ..!

இழந்தவன் தேடுவதும் இருப்பவன் தொலைப்பதும் ஒன்றை மட்டுமே… அது தான் ” அம்மா ” . இணையத்தில் உலாவரும் வீடியோ ஒன்றில் தன் தாயிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகனின் செயல் இணையவாசிகளை ஈர்த்து உள்ளது.

ஒருவரையொருவர் நேசிப்பவர்களுக்கிடையேயான உணர்வுபூர்வமான மறு இணைப்பு எப்போதும் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாகும். அதுபோன்று ஒரு வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ , ஒரு தாய்க்கும் அவரது மகனுக்கும் இடையிலான உணர்ச்சிகரமான மறு இணைவின் தருணத்தைக் காட்டுகிறது.

இதில் , பிறந்தநாள் அன்று 80 வயதான ஒரு தாய் சோபாவில் அமர்ந்து இருக்க , அங்கு ஒரு நபர் வருகிறார். அந்த தாயின் பின் நடந்து வந்த நபரை கவனித்த அவர் , எனது பிறந்தநாள் பரிசை கொண்டுவந்திங்களா என கேட்கிறார்.

ஆனால் அவருக்கு தெரியாது, வந்தது தன் மகன் என்று . அந்த மகனும் அவருக்கு ஆம் என்று பதிலளித்து ஒரு பூங்கோத்தை கொடுக்கிறார். மகிழ்ச்சியில் அதை வாங்கும் அந்த தாய் அவருக்கு நன்றி சொல்ல அவரை அணைக்க சென்றபோது முகத்தை பார்த்தபின் தான் தெரிந்தது.வந்துலுள்ளது தன் மகன் என்று.

https://www.instagram.com/p/CbEfBnqlAY2/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

பிரிந்து போன மகன் , 15 வருடங்களுக்கு பிறகு தன் மகன் பிறந்தநாள் அன்று , கண்முன்னே நிற்பான் என்று துளிகூட எண்ணிராத அந்த தாய் , கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க தன் மகனை அனைத்து கொள்கிறார்.

இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில் வரும் பாச பின்னணைப்பு பலரின் வாழ்வோடு ஒத்துப்போகிறது என்பதை மறுக்கமுடியாது.

Related News

Latest News