Friday, December 27, 2024

தலையணை மந்திரம் தெரியும்…. அதென்ன தலையணை சண்டை?

திருமணமானவர்களுக்குத் தலையணை மந்திரம் பற்றித் தெரியும். ஆனால், தலைணைச் சண்டை பற்றி யாருக்காவது தெரியுமா?

இதோ…இந்த வீடியோவைப் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க…

இது குழந்தைச் சண்டை இல்லை. தொழில்முறை விளையாட்டு.
தலையணைச் சண்டை தற்போது விளையாட்டு மைதானத்தில் விளையாடப்படும் ஒரு விளையாட்டாகவே மாறியுள்ளது.

தலையணைச் சண்டை சாம்பியன்ஷிப்புக்கான போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி நிகழ்ந்தது. இந்தப் போட்டியில் 16 ஆண்கள், 8 பெண்கள் உள்பட மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

போட்டி தொடங்கியதும் தற்காப்புக் கலைகளைப் பயன்படுத்தியும், போட்டிக்கென்று தயாரிக்கப்பட்ட தலையணைகளைப் பயன்படுத்தியும் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.

பெண்கள் பிரிவில் ஸ்டெல்லா நூன்ஸ்சும் ஆண்கள் பிரிவில் ஹாலி டில்மேனும் வெற்றிபெற்றனர். வெற்றிபெற்றவர்களுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டாலர் ரொக்கப் பரிசும், ஒரு வெள்ளி பெல்ட்டும் பரிசளிக்கப்பட்டன.

இந்தப் போட்டியைக் கண்டுகளிக்கப் பார்வையாளர்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், அநேகம்பேர் வன்முறை இல்லாத நல்ல போட்டியைக் கண்டு ரசிக்க விரும்புகின்றனர். அவர்களுக்காகவே இந்தப் போட்டி நடத்தப்பட்டது என்கிறார்.

Latest news