கிட்டத்தட்ட 54 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடியின் போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி தேவையில்லாத பேசுச்சுகள் கூற்றுக்களை எல்லாம் அடித்து நொறுக்குவது போல கிட்ட தட்ட 54வயது வித்தியாசத்துடன் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.
அமெரிக்காவின் டென்னசி என்ற மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் கேரி [வயது 24] மற்றும் 77 வயதான மூதாட்டி அல்மெடா ஆகிய இருவருக்கும் 7 வருடங்களுக்கு முன் 2015ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக திருமணம் நடைபெற்றது.
2015ம் ஆண்டு மூதாட்டி அல்மெடாவின் மகன் இறுதிச்சடங்கில் கேரி பங்கேற்றார்.
அப்போது கேரிக்கும், அல்மெடாவிற்கும் அறிமுகமானது அதன்பின்னர் இது இரண்டு வாரங்களிலேயே காதலாக மாறி பின் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
இருவருக்கும் திருமணமாகும் போது அல்மெடாவிற்கு 71 வயது, அதை அப்படியே திருப்பி போட்டால் கேரிக்கு 17 வயது தான்.
தங்களது திருமண வாழ்க்கை குறித்து வரும் விமர்சனங்களை ஒருபோதும் இந்த தம்பதிகள் கண்டு கொள்வது கிடையாதாம்.
கடந்த பிப்ரவரி14ஆம் தேடி காதலர் தினத்தை முன்னிட்டு உலகத்திலேயே சிறந்த மனைவி என அல்மெடாவை புகழ்ந்து கேரி போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு தான் இப்போதைய ஹாட் சென்சேஷன்.
அதில் அவர் கூறுகையில் தனக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி அற்புதமானது என்றும், இருவரும் ஒன்றாகச் செலவிடும் ஒவ்வொரு அவுன்ஸ் நேரத்தையும் ரசிப்பதாகவும் கேரி புகழ்ந்து தள்ளி அதில் கூறியுள்ளார்.
பல மோசமான நிலைகளையும் இந்த தம்பதி கடந்து வந்துள்ளார்கள்.
முதல் கணவரான டொனால்டாவிற்கும் அல்மெடாவிற்கும் 43 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
2013ம் ஆண்டு முதல் கணவர் உயிரிழந்த நிலையில், மூத்த மகனுடன் வசித்து வந்துள்ளார் அல்மெடா.
ஆனால் மூத்த மகனும் 2015ம் ஆண்டு வலிப்பு நோயால் இறந்துவிட அல்மெடா மனமுடைந்து போயுள்ளார்.
அந்த சமயத்தில் தனக்கு ஆறுதலாகவும், பலமாகவும் அமைந்த ஆத்ம துணை தான் கேரி என்று உணர்ச்சி பெருக்குடன் தெரிவித்துள்ளார்.