Sunday, August 31, 2025
HTML tutorial

உக்ரைன் – ரஷ்யா : போர் முடிவுக்கு வருகிறதா  ?

இரண்டு வாரம் கடந்தும் உக்ரைனை ரஷ்யா இன்னமும் கைப்பற்றாதது ஏன்? என்ற கேள்வி தான் அனைத்து தளத்திலும் எழுப்பப்பட்டு வந்தாலும் ரஷ்யா தன் திட்டத்தில் உறுதியுடனே முன்னேறிச்  செல்கிறது அதற்கான காரணம் உக்ரைனின் வடகிழக்கில் உள்ள லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளுடன் கிரீமியாவை இணைக்கும் வகையில் தனது படைகளை நிறுத்தியுள்ளது. இதன் மூலம் உக்ரைன் நாட்டில் உள்ள ரஷ்ய ஆதரவாளர்கள் கரத்தை மேலும்  வலுப்படுத்துகிறது. உக்ரைன் நாட்டில் சுமார் 10 சதவீதம் பேர் ரஷ்ய மொழி பேசுபவர்கள். எனவே அவர்கள் மூலமாக உக்ரைன் நாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்பதன்  திட்டமாகவே  இது  பார்க்கப்படுகிறது.இதற்கு பக்கபலமாக உக்ரைன் நாட்டின் விமான தளங்கள் மற்றும் துறைமுகங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தி, தலைநகர் கீவ் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை ரஷ்ய ராணுவம் எடுத்து வருகிறது.குறிப்பாக, உக்ரைன் ராணுவத் தளங்களை முடக்கும் நோக்கத்துடன் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் போரில் தலையிடப்போவதில்லை என கூறிவரும் நிலையில், கீவ் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்ற எந்த அவசரமும் இல்லை என்பதும் ரஷ்யாவின் அதித நம்பிக்கையாக இருக்கிறது. இதனால்தான், ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் நுழையாமல் வெளியிலிருந்து முற்றுகையிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதே சமயத்தில், அதிபர் செலன்ஸ்கி ஆதரவாளர்கள் மீது அழுத்தம் கொண்டுவர, முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் குண்டு வீச்சு நடத்தி வருகிறது ரஷ்யா.

ரஷ்யப் படைகள் உக்ரைன் நகரங்களில் நுழைந்து கைப்பற்ற முயற்சி செய்தால் ரஷ்ய தரப்பில் உயிரிழப்பு அதிகரிக்கும் என்பதாலும், உயிரிழப்பு அதிகரிக்காமல் இருக்க, உலக அரங்கில் ரஷ்ய படையெடுப்பு குறித்த விமர்சனங்கள் எழுந்தால்  உக்ரைன் நாட்டில்   ஆட்சி மாற்ற நோக்கம் கூட பாதிக்கலாம் என்ற எண்ணத்துடன் வெளிநாட்டவர் மற்றும் பொதுமக்கள் வெளியேற அவகாசம் அளித்த பின், ரஷ்ய படைகள் தொடர்ந்து கீவ் உள்ளிட்ட நகரங்களை தாக்கி, அதிபர் செலன்ஸ்கி ஆதரவாளர்களை விரட்டி  விட்டு ரஷ்யா ஸ்டைலில் சொன்னால் சிறப்பு ராணுவ நடவடிக்கை அதாவது போர் முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது .

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News