Thursday, December 26, 2024

78 முறை கோவிட் பாசிட்டிவ் ரிசல்ட் வந்த நபர்

78 முறை கோவிட் பரிசோதனை செய்துகொண்டதில், அத்தனை முறையும் பாசிட்டிவ் வந்த நபர் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

உலகம் முழுவதும் 40 கோடிபேரைத் தொற்றிய கொரோனா, பல லட்சம் பேரின் உயிர்களைப் பறித்துள்ளது. இந்த நிலையில், 14 மாதங்களில் 78 முறை கோவிட் 19 பரிசோதனை செய்துகொண்ட ஒருவருக்கு அத்தனை முறையும் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட்டே வந்துள்ளது.

அதைத்தொடர்ந்து, 9 மாதங்கள் மருத்துவமனையிலும், 5 மாதங்கள் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டார்.

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் பகுதியில் உள்ள சாரியர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முசாஃபர் கயாசன். 56 வயதாகும் இவர், உலகம் முழுவதும் கொரோனா பரவத் தொடங்கியபோது, கடந்த 2020 ஆம் ஆண்டு முதன்முறையாக கொரோனா பரிசோதனை செய்தார். அந்தப் பரிசோதனையில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர். சிறிதுநேர சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, தனது வீட்டுக்குச் சென்றார்

வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்ட அவர் கொரோனாவிலிருந்து மீண்டுவரவில்லை. மீண்டும் மீண்டும் கோவிட்19 பரிசோதனை செய்தாலும், எந்தவொரு சோதனையிலும் அவர் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டதாக முடிவுகள் வரவில்லை.

இப்படியே தொடர்ந்து 78 முறை கோவிட் டெஸ்ட் எடுத்துள்ளார். அத்தனை முறையும் பாசிட்டிவ் என்றே ரிசல்ட் வந்துள்ளது. அதனால் நொந்துபோயுள்ளார் முசாஃபர்.
நீண்டகாலம் கொரோனா தொற்று ஏற்பட்டவர் என்கிற சாதனையைப் பெற்றிருக்கிறார் முசாஃபர்.

இவர் லுகேமியா என்னும் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய், நோயாளியின் உடம்பிலுள்ள வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் கடுமையாகப் பாதிக்கிறது..

கொரோனாவுக்கும் முசாஃபருக்கும் என்ன பந்தமோ தெரியவில்லை…பாவம் முசாஃபர்..தற்போதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாததால், தவிப்பில் உள்ளார்.

Latest news