ஜப்பானிய கலைஞரான சச்சி என்பவர் தான் அந்த பெண். இவர் கம்பளி, கண்ணாடி மற்றும் உண்மையான பூனை மீசை முடிகளை பயன்படுத்தி மிக யதார்த்தமான செல்லப்பிராணியான பூனையின் உருவப்படங்களை உருவாக்குகிறார். ஆச்சு அசல் பூனையை நேரில் பார்பதுபோன்று உள்ளது இவரின் படைப்பு.
நாள் ஒன்றுக்கு 10 மணி நேரங்கள் இதற்காக ஒதுக்குகிறார் . பூனையின் கண்களை கண்ணாடி துண்டுகளில் இருந்தும் ,பூனையின் காது பகுதிகள் கம்பளி யை கொண்டு உருவாக்குகிறார்.
இதுகுறித்து அவர் குறிகையில் , ஒரு பூனையை தயாரிக்க ஒரு மாதங்கள் எடுத்துக்கொள்ளும். எனது முயற்சி மற்றவர்களுக்கு , பூனைகளை காக்க எண்ணத்தை ஊக்குவிக்கும் எனவும் எனது பூனைகள் பலரின் இதயத்தை வென்றெடுக்கும் என நம்புகிறேன்.எனது படைப்புக்களை கொண்டு கண்காட்சி ஒன்றை நடத்தவும் திட்டமிட்டு உள்ளேன்.
இதனால் ஆதரவற்ற பூனைகள் காப்பாற்றப்படும் என நம்புவதாக கூறுகிறார் சச்சி.