காக்பிட்டில் அமர்ந்த 2 வயது சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
வீடியோவில் காணும் அந்த 2 வயது சிறுவன் விமானப் பயணத்தில் ஆர்வமாக இருந்துள்ளான். அதன் எதிரொலியாக, அண்மையில் தனது தந்தையுடன் விமானத்தில் பயணம்செய்தபோது, விமானியின் அறைக்குள் சென்றுள்ளான்.
அவனை பைலட், வரவேற்று தனது நாற்காலியில் உட்கார வைத்துள்ளார். தனது தொப்பியைக் கழற்றி சிறுவனின் தலையில் வைத்தார். அப்போது விமானத்தின் செயல்பாடுகள் குறித்து சிறுவனிடம் சுருக்கமாகக் கூறினார்.
சிறிதுநேரம் கழித்து, தனது கனவு நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியில் புன்னகையோடு காக்பிட்டிலிருந்து அந்தச் சிறுவன் வெளியே வருகிறான்.
அந்தச் சிறுவனைப் பார்த்த நெட்டிசன்கள், எதிர்காலத்தில் ஒரு சிறப்பான பைலட் உருவாகிக்கொண்டிருக்கிறார் எனக் கருத்துத் தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.