Thursday, December 26, 2024

மிச்ச உணவை சாப்பிட்டவருக்கு ஏற்பட்ட துயரம்

மீதமான உணவை சாப்பிட்டவருக்கு கைகால்கள் பறிபோன சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இந்த அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அங்கு பாஸ்டன் நகரிலுள்ள உணவகம் ஒன்றில் மீதமான சீன உணவுகளை சாப்பிட்ட 19 வயது மாணவருக்குத்தான் இந்த துயரம் ஏற்பட்டுள்ளது.

சட்டக்கல்லூரி மாணவரான அவர், அந்த சீன உணவகத்தில் பகுதி நேர ஊழியராக வேலைசெய்து வந்துள்ளார். பணி முடிந்ததும் அங்கிருந்த எஞ்சிய சாப்பாட்டையும் கோழி இறைச்சியையும் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு சில மணி நேரத்தில் அவரது உடலில் பல உறுப்புகள் செயல் இழந்துள்ளன.

குடல் இறக்கமும் ஏற்பட்டுள்ளது. குளிர், மங்கலான பார்வை, மூச்சுத் திணறல், தலைவலி, நெஞ்சு வலி, வயிற்றுவலி, தலைவலி, வாந்தி போன்றவையும் ஏற்பட்டுள்ளன. அவரது தோலும் நீலநிறமாக மாறத் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அந்த மாணவருக்கு இரத்தம், சிறுநீர்ப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், நெய்சீரியா மெனிங்கி டிடிஸ் என்னும் பாக்டீரியா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், அவரது ரத்தம் உறைந்து கல்லீரல் செயல் இழந்தது.
அவரது தோல் நிறம் மாறியதற்கு பர்புரா ஃபுல் மினன்ஸ்தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. அதனால், அந்த மாணவரின் இரண்டு கால்களும் கைவிரல்களும் வெட்டி அகற்றப்பட வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.

2021 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முந்தைய நாள் உணவு அமுது என்றாலும், அதை சாப்பிட வேண்டாம் என்கிறது சித்த மருத்துவம். பழைய உணவை சாப்பிடுவதே பல நோய்களுக்கு வழிவகுக்கிறது என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நமது சித்தர்கள் கூறியுள்ளது இந்த தருணத்தில் நினைவு கூரத்தக்கது.

Latest news