உக்ரைன் மீதான ரஷ்ய படை தாக்குதலில் தற்போதுவறை ஒரு லட்சத்திற்கும் அதிகமான உக்ரைனியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பிற நாட்டு குடிமக்களும் தாய்நாடு திரும்பி வருகின்றனர். ரஷ்ய படைகள் தாக்குதல் தொடங்கி ஒரு வாரம் ஆகிய நிலையில் , அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது .
குறிப்பாக , அங்குள்ள மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். உக்ரைனியர்கள் மட்டும் அல்லாமல் இன்னும் மீட்கப்படாத இந்தியர்கள் மற்றும் பிற நாட்டினரும் சிக்கியுள்ளனர்.
உக்ரைனின் பல முக்கிய பகுதிகளை கைப்பற்றி அங்குள்ள அரசு கட்டிடங்கள் , மக்கள் குடியிருப்பு பகுதிகள் என தாக்கி வருகிறது ரஷ்ய படை.இந்நிலையில் பாதுகாப்பான இடங்களில் முகாமிட்டுள்ள பொது மக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
வீட்டை இழந்து , உறவுகளை இழந்து , ஒருவருக்கொருவர் தன்னம்பிக்கை உடன் போர் ‘விரைவில் முடிவுக்கு வரும் என காத்துகொண்டு உள்ளனர். இழக்க ,”உயிரை தவிர வேறொன்றும் இல்லை என்ற நிலையிலும் ,அங்குள்ள மக்கள் நாட்டு பற்று , உதவி மனப்பான்மை , பிறர்மீது அன்பை வெளிப்படுத்துதல் , என நற்பண்புகளுடன் தங்கள் எதிர் காலத்தை எண்ணி உள்ளனர்.
இதனை வெளிப்படும் விதம் ,உக்ரைனில் உணவின்றி தவிக்கும் மக்கள் அங்குள்ள முகாம்களில் வழங்கப்படும் உணவுகளை வரிசையில் நின்று ,தங்கள் நேரம் வரும்வரை காத்திருந்து உணவை வாங்கி உண்ணும் தருணம் மனதை ஈர்த்துள்ளது .
இது ” வறுமை காலத்தில் சாப்பிடக்கூட உணவில்லா தருணத்தின் போது கூட அவர்களில் நேர்மையை இவ்வுலகிற்கு உணர்த்தும் விதம் உள்ளது.
‘தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’ என கூறினார் பாரதியார் ஆனால் இன்றோ , ஆதரவில்லா மக்கள் உண்ண உணவின்றி ,நம் வாழ்வும் மாறும் என்ற நம்பிக்கையில் வாழ்கின்றனர். ஒருபுறம் பண்டிகை, விருந்து என்ற பெயரில் உணவு வீணாக்கப்படுகிறது.
மறுபுறம் ஒருவேளை உணவுக்காக பசியால் துடிப்பவர்களும் உள்ளனர். உணவை வீணாக்காமல் பசியால் வாடுபவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதை உணர்த்திதுகிறது இன்றைய உக்ரைன் மக்களின் நிலை மேலும் உலகம் அறியவேண்டிய நாகரிகம் எவ்வளோவோ உள்ளது அவர்களிடம்