Thursday, December 26, 2024

எதிர்காலத்தை உருவாக்கியுள்ள துபாய்  ம்யூசியம்

துபாயில் `எதிர்காலத்தின் அருங்காட்சியகம்’ என்ற சுற்றுலா தளம்  கடந்த பிப்ரவரி 22 அன்று, துபாயின் ஷேக் சையத் சாலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூப்  அவர்களால் திறக்கப்பட்டது  இந்த அருங்காட்சியகம் சுமார் 30 ஆயிரம் சதுர மீட்டர் அளவில், 7 அடுக்கு மாடி கொண்ட இந்தக் கட்டிடம் 77 அடிகள் உயரம் கொண்டுள்ளதாகவும், அதன் முகப்பில் ரோபோக்களால் தயாரிக்கப்பட்ட சுமார் 1024 அரேபிய எழுத்துகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தின் நோக்கம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை மக்களுக்குக் காட்டும் முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தின் கருவிகளான  விர்ச்சுவல் பயணங்கள் உள்ளிட்ட  பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதன் உள்புறம் அந்தந்த பகுதிகளில் உள்ள கான்செப்ட் அடிப்படையில் மாறும் தன்மை கொண்டது. இதில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் அதிநவீன அம்சங்கள் சேர்க்கப்பட்டு, இதனைப் பார்வையிட வருவோருக்கு புதுமையான அனுபவம் அளிக்கும் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளமும் எதிர்காலத்தில் இருந்து கொண்டு வந்துள்ள திரைப்பட செட் போல உருவாக்கப்பட்டிருக்கிறது .சுமார் 3 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தொகை இந்த அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்க்க நுழைவுக் கட்டணமாகப் பெறப்படுகிறது. மேலும், இதற்கான நுழைவுச் சீட்டை ஆன்லைனிலும்  முன்பதிவு செய்யலாம்.

Latest news