Wednesday, January 15, 2025

உக்ரைன் ரஷ்யா போரால்  உலக நாடுகள் சந்திக்கவிருக்கும் பிரச்னைகள் என்னென்ன

ஒட்டுமொத்த ஆசிய, ஐரோப்பிய சந்தை பாதிக்கப்படும்.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வர்த்தகம் தடைப்பட்டு, பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்திக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.

சீனாவுடன் ரஷ்யா கைகோர்க்கும் பட்சத்தில். இதன் மூலம், ரஷ்யாவுடன் சீனா நல்ல நட்புறவை ஏற்படுத்திக்கொண்டு லாபம் அடையும் எனச் சொல்லப்படுகிறது. இது உலகரங்கில், அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

உக்ரைன் ரஷ்யா போரால் ஏற்படும் பாதிப்பால்  இந்தியாவுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா ?

சுமார் 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உக்ரைனில் வசிக்கின்றனர். இவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது முதல் பணி. இது மட்டுமே உக்ரைன் பிரச்னையால் இந்தியா சந்திக்கும் நேரடி சவால். ஆனால், மறைமுகமாக இன்னும் பல சவால்கள் இந்தியாவுக்கு காத்திருக்கின்றன.

இந்தியாவுக்கு முதல் சவால் ரஷ்யாவுடனான நட்பு உறவு பாதிப்பு

2016 – 20 காலகட்டத்தில் இந்தியா இறக்குமதி செய்த பாதுகாப்பு தளவாடங்களில் சுமார் 50% ரஷ்யாவிலிருந்து வந்தவை. இந்திய விமானப்படையில் இருக்கும் 71% ஜெட் விமானங்களும் ரஷ்யாவிலிருந்து வந்தவை அல்லது ரஷ்ய உதவியுடன் தயாரிக்கப்பட்டவையே. அண்மையில் இந்தியா வந்து சேர்ந்த ஏவுகணை பாதுகாப்பு தொழில்நுட்பமும் (S-400 ரக ஆயுதங்களும்) ரஷ்யாவுடையதே.

நம் நாட்டின் பாதுகாப்பு படைகளில் ரஷ்யாவின் ஆதிக்கம் எவ்வளவு இருக்கிறது என்பதை மேற்கூறியவையை   உணர்த்துகிறது

இதுமட்டுமன்றி, சர்வதேச அளவில் பல விவகாரங்களில் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நண்பனாகவும் இருக்கிறது ரஷ்யா. இந்த உறவுக்கு, உக்ரைன்-ரஷ்யா போர்  பிரச்னையால் சிக்கல் ஏற்படலாம்.

இப்போதுவரை, `உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு’ எனச் சொல்லி, அமெரிக்கா – ரஷ்யா இருவர் பக்கமும் சாயாமல் இருக்கிறது இந்தியா. ஆனால், இன்று உக்ரைன் பிரச்னை உச்சம் தொட்ட நிலையில்  ஏதேனும் ஒரு பக்கம் சாய்ந்தாக வேண்டும்; இல்லையெனில், இரண்டு பக்கமும் அதிருப்தியைச் சந்தித்தாக வேண்டும்.

சரி, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை ஆதரித்தால் என்னாகும்?

வேறென்ன அமெரிக்காவுடன் உரசல் ஏற்படும்

ஆசியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில், அதை எதிர்கொள்வதற்காக Quad அமைப்பில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறது அமெரிக்கா.

தீராத எல்லைப் பிரச்னை, இலங்கை – பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் ஆதிக்கம் என சீனாவால் நெருக்கடியை சந்திக்கும் இந்தியாவுக்கு, அமெரிக்காவின் நட்பு எப்போதும் விட இப்போது மிக அவசியம்.

மேலும், ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாடுகளின்மீது CAATSA (Countering America’s Adversaries Through Sanctions Act) சட்டத்தின்படி, அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து வரும் நிலையில். ரஷ்யாவுடனான S-400 ரக ஆயுதங்கள் ஒப்பந்தத்தைக் காரணம்காட்டி இந்தியா மீதும் பொருளாதாரத் தடை விதிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்தியாவுடனான நட்புறவு காரணமாகவே  அதை சற்று  தள்ளி வைத்திருக்கிறது. ஒருவேளை உக்ரைன் விவகாரத்தில் இந்தியா, ரஷ்யா பக்கம் சாய்ந்தால், இந்தப் பொருளாதாரத் தடைக்கு வாய்ப்பு அதிகம் என்கின்றனர் நிபுணர்கள்.

அடுத்த சவாலாக சீனா ஆதிக்கம் பெறும்

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவை அந்நாட்டின்மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கும். இது இயல்பாகவே, ரஷ்யாவை சீனாவை நோக்கித் தள்ளும்.

இப்படி, அமெரிக்காவை பொது எதிரியாகக் கருதும் இரண்டு நாடுகளும் ஒன்றிணைவது அமெரிக்கா, இந்தியா ஆகிய இருநாட்டுக்கும் பின்னடைவே.

ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இணைந்து சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த உருவாக்கிய Quad அமைப்பும் நீர்த்துப்போகும். பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் மீது கவனம் செலுத்திவந்த அமெரிக்கா, மீண்டும் ஐரோப்பாவில் ரஷ்யா மீதே அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும்.

மேலும், ஒருவேளை இந்தியா அமெரிக்காவை ஆதரித்தால், அதனால் ஒருபக்கம் ரஷ்யாவின் நட்பையும் இழந்து, மறுபக்கம் சீனா ஆதாயமடையவும் வழி செய்தது போலாகி விடும்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும்பட்சத்தில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா என்கிற 3 காய்களை இந்தியாவை எப்படி நகர்த்துகிறது என்பதைப் பொறுத்தே, உலக அரங்கில் இதன் முடிவும் பின்விளைவுகளும் தெரியவரும்.

இந்த மூன்று சவாலுமே இந்தியாவின் தேச பாதுகாப்பு, வர்த்தகம்,வெளியுறவுக்கொள்கை என மூன்று முக்கியமான விஷயங்களுடன் தொடர்புடையவை என்பதால், உக்ரைன்-ரஷ்யா போர்  விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கை உற்றுநோக்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது ரஷ்யா – உக்ரைன் போல் , ஏதாவது ஒரு நாட்டின் பக்கம் இந்தியா நிற்கவேண்டிய நிலை ஏற்படும். இந்த விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவேண்டிய நிலை ஏற்படும் எனவே, ரஷ்யா அல்லது அமெரிக்காவின் பகையை இந்தியா சந்திக்க நேரிடும் எனச் சொல்லப்படுகிறது. இது சீனாவுக்கு மேலும் சாதகமாக அமையும். ஒருவேளை   இந்த போர் விவகாரத்தை இந்திய வெளியுறவுத்துறை எப்படிச் சமாளிக்கப்போகிறது என்பதன் மிக பெரிய கேள்விக்குறியாக உள்ளது .

Latest news