திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், சக மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவன் ஒருவனை, சக மாணவனே அரிவாளால் வெட்டிய சம்பவம் அரங்கேறியது. தாக்குதலில் படுகாயம் அடைந்த மாணவன் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து வந்த போலீசார் தாக்குதல் நடத்திய மாணவனை பிடித்து கைது செய்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட மாணவருக்கும், வெட்டுப்பட்ட மாணவருக்கும் இடையே 4 நாட்கள் முன்பாக பென்சில் கொடுப்பது தொடர்பாக பிரச்சனை இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.