ஒரு மனிதன் 63 ஆண்டுகளாக தூங்காமல் வாழ்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?..ஆம் உண்மையில் அப்படி ஒரு மனிதர் இருக்கிறார்.
வியட்நாம் நாட்டை சேர்ந்த அந்த மனிதரின் பெயர் தாய் நோக். அவருக்கு 81 வயது ஆகிறது. இந்த மனிதர் கடந்த 63 வருடங்களாக தூங்கவில்லை. கடைசியாக அவர் 17 வயதில் தூங்கியதாக கூறுகிறார்.
1962 ஆம் ஆண்டு தனக்கு மலேரியா ஏற்பட்டதாகவும், அதன் பிறகு தூக்கமின்மை ஏற்பட்டதாகவும் அவர் கூறுகிறார். தூக்கமின்மை பிரச்சனை காரணமாக பல மருத்துவர்களிடம் சென்றும் பலனில்லை. மற்றவர்கள் தூங்குவதைப் பார்க்கும்போது எனக்குப் பொறாமையாக இருக்கும் என கூறியுள்ளார்.
63 வருடங்களாக தூங்காமல் இருந்த பிறகும் தாய் நோக் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதைப் பார்த்து மருத்துவர்கள் கூட வியப்படைகிறார்கள்.