Wednesday, January 15, 2025

வேலையில்லா பட்டதாரிகளுக்கு 8 ஆயிரத்து 500 ரூபாய் : காங்கிரஸ் அறிவிப்பு

டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றால், வேலையில்லா பட்டதாரிகளுக்கு 8 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு, பெண்களுக்கு மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், டெல்லியில் ஆட்சி அமைத்தால் ‘யுவ உதான் யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு 8 ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Latest news