Tuesday, February 24, 2026

தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சி தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்.ஜெயா, இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் இருந்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சிறப்பு முயற்சிகள் துறை மாற்றப்பட்டுள்ளார்.

கலைச்செல்வி மோகன் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர். காஞ்சிபுரம் மாவட்டம் – தற்போது இயக்குநர், பொருளியல் மற்றும் புள்ளியியல், (திருமதி ஆர்.ஜெயா, இ.ஆ.ப அவர்களுக்குப் பதிலாக) மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

த.சினேகா, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர், செங்கல்பட்டு மாவட்டம் தற்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ்.மாலதி ஹெலன், இ.ஆ.ப., சார் ஆட்சியர், செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம்- தற்போது பதவி உயர்வு பெற்று மாவட்ட ஆட்சித் தலைவர், செங்கல்பட்டு மாவட்டம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கு.ரவிகுமார், இ.ஆ.ப., சார் ஆட்சியர், பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்- கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சந்திர சேகர் சாகமூரி, இ.ஆ.ப. (ஒன்றிய அரசுப் பணியிலிருந்து திரும்புதல்)- முதன்மை செயல் அலுவலர், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், (காலிப் பணியிடம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

அ.சண்முக சுந்தரம், இ.ஆ.ப. செயலாளர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், (காலிப் பணியிடம்)

நே.பொன்மணி, இ.ஆ.ப.- இணை ஆணையர், வணிகவரி, ஈரோடு.

Related News

Latest News